பிரபல நகைச்சுவை நடிகை மரணம்

மலையாள திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்த சுபி சுரேஷ் மரணம் அடைந்தார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை சுபி சுரேஷ் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. இது மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுபி சுரேஷ் தொலைக்காட்சியில் நிழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவுக்கு வந்தார். 2006-ல் ‘கனக சிம்ஹாசனம்’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார்.

‘ஹேப்பி ஹஸ்பண்ட்’, ‘எல்சம்மா என்ன ஆண்குட்டி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு மலையாளத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சுபி சுரேஷ் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here