தனது தாயைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மகனுக்கு 10 மாத சிறை..!

தனது சொந்த தாயைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில், இன்று தாம்பின் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தது, அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் அசுவாண்டி சிதாம், 30, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி, கார்தினி கஸ்ரான் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிப்ரவரி 21 அன்று காலை 10.30 மணியளவில் ஃபெல்டா ஜெலாய் 1 இல் உள்ள அவர்களது வீட்டில், பாதிக்கப்பட்ட தாய், அவரது மற்ற மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

திடீரென்று, பாதிக்கப்பட்டவரின் மகனான குற்றம் சாட்டப்பட்டவர், வீட்டிற்கு வெளியே இருந்த மூன்று குடும்ப உறுப்பினர்களை நோக்கி சத்தம் போட்டார், அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் எனக் கூறி , பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை அமைதிப்படும்படி கேட்டுக் கொண்டார், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர், வெறித்தனமாகச் சென்று தனது தாயைத் திட்டியதுடன் ஒரு இறைச்சி வெட்டும் கத்தியைக் காட்டி, அவரை கொலை செய்வதாக மிரட்டும் வார்த்தைகளால் ஏசினார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக குறித்த தாய், தனது சகோதரியின் வீட்டிற்குத் தப்பிச் சென்றார், மேலும் அவரது மருமகள் தனது மாமியாரின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு, புகாரளித்தார் எனக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here