துருக்கியே நிலநடுக்கம்: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு

துருக்கியே-சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் 43 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பல நாட்கள் நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

அதேவேளை, நிலநடுக்கம் தொடர்பாக துருக்கி அரசு பல்வேறு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 171 பேருக்கு எதிராக துருக்கியே நீதித்துறையால் பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 171 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here