விஜய், அஜித் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்கள் விஜய், அஜித். திரைத்துறையில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் கொண்டபவராகவும் இவர்கள் திகழ்கின்றனர்.

புதிதாக சினிமாவுக்கு வரும் நடிகைகள் அனைவரும் ஒரு படமாவது இவர்களுடன் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் விஜய், அஜித் படங்களை ரிஜக்ட் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த படம் ‘பிரேமம்’. இந்தப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே மற்றும் வெற்றிமாறன் இயக்கிய பாவ கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் சாய் பல்லவி நடிப்பில் ‘கார்கி’ படம் வெளியானது. சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. விமர்சனரீதியாகவும் இந்தப்படம் எக்கச்சக்க பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்தப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் ஏராளமான பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில் விஜய், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை சாய் பல்லவி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடிக்க ஆரம்பத்தில் சாய் பல்லவியிடம் தான் கேட்கப்பட்டதாம்.

ஆனால் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் அவர் ‘வாரிசு’ பட வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இதனையடுத்து ராஷ்மிகா மந்தனா அந்த படத்தில் நடித்தாராம்.

‘வாரிசு’ படம் வெளியான பிறகு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் விஜய்க்காகவே அந்தப்படத்தில் நடித்ததாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார். அதே போல் ‘வலிமை’ படத்தில் நடிக்கவும் முதலில் சாய் பல்லவியிடம் அணுகப்பட்டதாம்.

அதிலும் தரமான கதாபாத்திரம் இல்லாததால் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனையடுத்தே அந்த கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

விஜய், அஜித் படங்களில் நடித்தால் போதும் என நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியம் இல்லாததால் அவர்களின் பட வாய்ப்பை சாய் பல்லவி மறுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது. சாய் பல்லவி அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here