இலங்கை பெண் உடன் திருமணமா? – நடிகர் சிம்பு தரப்பு மறுப்பு

நடிகர் சிம்பு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விரைவில் மணமுடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பிலிருந்து வெளியிடபட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம்.

அதில் எந்தவித உண்மையுமில்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் தகவலை உறுதி செய்த பின்னர் வெளியிட வேண்டுகிறோம்.

அப்படி ஒருவேளை திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் உங்களிடம் சொல்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here