நெரிசலைக் குறைக்க அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் KLIAவில் ஆட்டோகேட் திறக்கப்படும்

கோலாலம்பூர்: குடிநுழைவு முகப்பிடங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில் KLIA யில் உள்ள அனைத்து ஆட்டோகேட்கள் (தானியங்கி முறை) வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

“விரைவான தீர்வாக” மலேசியர்களைத் தவிர அனைத்து வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் ஆட்டோகேட் நுழைவு அமைப்பு திறக்கப்படும் என்று சைஃபுதீன் கூறினார்.  KLIA இல் உள்ள அனைத்து ஆட்டோகேட்களையும் வெளிநாட்டவர்களுக்கு, குறிப்பாக சிங்கப்பூர், புருனே, நியூசிலாந்து மற்றும் G7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு திறக்க உத்தரவிடுகிறேன். இதன் மூலம்  நெரிசலைக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மக்களவையில் கூறினார்.

குடிநுழைவு முகப்பிடங்களில் நெரிசலைக் குறைக்கவும், KLIA க்கு வந்தவுடன் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட மும்தாஜ் முககட் நாவி (PN-Tumpat) இன் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

நாட்டின் அனைத்துலக நுழைவுப் புள்ளிகளில் நெரிசலைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக சைஃபுதீன் கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில், குடிநுழைவுத் துறையானது நீண்ட கால  அனுமதிச் சீட்டுகளை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு KLIA இல் ஆட்டோகேட் நுழைவு முறையைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்தியது.

இந்த நடவடிக்கையானது 1.86 மில்லியனுக்கும் அதிகமான தற்காலிக பணிக்கான வருகை பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் நீண்ட கால விசிட் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் கைருல் டிசைமி டாவுட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here