உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அதிக கோல்களை அடித்த ஜஸ்ட் ஃபொன்ட்டேய்ன் தனது 89 வயதில் காலமானார்

பிரான்ஸ் நாட்டு காற்பந்து வீரர் ஜஸ்ட் ஃபொன்ட்டேய்ன் (Just Fontaine) தனது 89 ஆவது வயதில் நேற்று காலமானார்.

1958ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 6 ஆட்டங்களில் அவர் 13 கோல்கள் அடித்துச் சாதனை படைத்தார். அந்த ஆண்டில்தான் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் பிரான்ஸ் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்றுவரை மூவர் மட்டுமே உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஃபொன்ட்டேய்னின் சாதனையை முறியடித்துள்ளனர். ஜெர்மனியின் மிரோஸ்வாவ் க்ளோச (Miroslav Klose – 16), பிரேசிலின் ரொனால்டோ (Ronaldo – 15), மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லர் (Gerd Muller – 14) ஆகியோரே அவர்களாவர்.

அர்ஜென்ட்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) ஃபொன்டேய்னின் 13 கோல்கள் சாதனையைச் சமன் செய்துள்ளார். ஆனால் அதை சமன் செய்வதற்கு அவருக்கு 5 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here