மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரருக்கு ஏழு நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு

சிம்பாங் எம்பாட், கம்போங் பெண்டாங் பாருவில் உள்ள வீட்டில், நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட அவரது மனைவியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, போலீஸ் லான்ஸ் கார்ப்ரல் பதவியிலுள்ள ஒருவர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணையை எளிதாக்கும் வகையில், சந்தேகநபருக்கு எதிரான இந்த தடுப்புக் காவல் உத்தரவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனா ரொசானா முகமட் நோர் பிறப்பித்துள்ளார்.

27 வயதான சந்தேக நபர், தற்போது துவாங்கு பௌசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அத்தோடு கொலைக்கான காரணம் தொடர்பில் போலீஸ் விசாராணை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here