வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் குலிஸ்தன் என்ற பகுதி உள்ளது. மிகவும் பரபரபான இந்த பகுதியில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வணிக வளாகங்கள், பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த 7 மாடி கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் கட்டிடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுமொத்த கட்டிடமும் நிலைகுலைந்தது.
இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாய பொருட்கள் தீப்பற்றி வெடித்ததே இந்த கட்டிட வெடிவிபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், 7 மாடி கட்டிட வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.