ஜோகூரில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 42,706 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மலாக்காவில் நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை குறைந்துள்ளது, மற்றும் பகாங் மற்றும் சரவாக்கில் இன்று நண்பகல் நிலவரப்படி வெள்ள நிலைமை மாறாமல் உள்ளது.
ஜோகூரில், பத்து பகாட் மற்றும் மூவார் மாவட்டங்களில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் மொத்தம் 42,638 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர், ஆனால், நண்பகலில் 42,706 ஆக உயர்ந்துள்ளது என்று, ஜோகூர் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது