கோலாலம்பூர்: 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் நிறுவனம் பெற்ற கடன்களில் 43.8 பில்லியன் ரிங்கிட்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது. மேலும் 9.7 பில்லியன் ரிங்கிட் நிலுவைத் தொகை மீதம் உள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள தொகையானது RM5 பில்லியன் மற்றும் RM4.7 பில்லியன் வட்டியை உள்ளடக்கியதாக துணை நிதி அமைச்சர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.
2023 பட்ஜெட்டில் நிதியமைச்சகத்தின் மதிப்பீடுகள் மீதான குழு நிலை விவாதத்தை முடித்த போது, “பங்குதாரர்களின் முன்பணத்தின் மூலம் இந்த பணம் 24.5 பில்லியன் ரிங்கிட் மற்றும் அறக்கட்டளை கணக்கு (RM19.3 பில்லியன்) மூலம் செலுத்தப்பட்டது. அபுதாபியின் முதலீட்டு நிறுவனமான இன்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் 1MDB சொத்துக்களில் RM33.6 பில்லியனையும், RM8 பில்லியனையும் அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
1MDB இன் முதன்மைக் கடன் மொத்தம் RM33.6 பில்லியன் என்றும், வட்டி RM14.9 பில்லியன் என்றும் அஹ்மத் கூறினார். நிதி அமைச்சகத்தின் மதிப்பீடுகள் RM57.3 பில்லியன்மக்களவை மூலம் நிறைவேற்றப்பட்டது.
2023 வரவுசெலவுத் திட்டத்தில் RM289.1 பில்லியன் இயக்கச் செலவு மற்றும் RM2 பில்லியன் தற்செயல் சேமிப்பு உட்பட அபிவிருத்திச் செலவினங்களுக்காக RM99 பில்லியனை உள்ளடக்கிய மொத்தமாக RM388.1 பில்லியனை செலவினமாக ஒதுக்கியுள்ளது.