TVET பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக RM3,000 வழங்கப்பட வேண்டும் என்கிறார் ஜாஹிட்

TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி முடித்த பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக RM3,000 வழங்கப்பட வேண்டும், இது நாட்டின் குறைந்தபட்ச ஊதியமான RM1,500 ஐ விட இருமடங்காக இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அவர்கள் மிகவும் திறமையான தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று ஊரக மற்றும் மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

“அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதன் மூலம், ஒரு நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதனால் நிறுவனங்களால் உயர்தர தயாரிப்புகள் அல்லது சிறந்த சேவைகளை வழங்க முடியும், ”என்று, அவர் அரசாங்கத்திற்கும் 10 அரசு-இணைக்கப்பட்ட மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MOC) கையெழுத்திட்ட பிறகு, செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொடர்பில் இது தனது பரிந்துரையே தவிர, இது உத்தியோகபூர்வ உத்தரவு அல்ல என்று, தேசிய TVET (தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி) கவுன்சில் தலைவரான அஹ்மட் ஜாஹிட் தெளிவுபடுத்தினார்.

மேலும் அந்த விழாவில் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here