அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒற்றுமை அரசு நிலைத்திருக்கும் – பிரதமர் நம்பிக்கை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசு தொடர்ந்து வலுவாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உறுதியாகவும் நிலைத்திருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற PKR 2023 சிறப்பு மாநாட்டில் உரையாற்றும்போது, கடந்த நான்கு மாதங்களாக சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்த கூட்டுக் கட்சிகளின் வலுவான ஆதரவின் அடிப்படையில், தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக PKR கட்சியின் தலைவருமான அன்வார் கூறினார்.

“இந்த ஐந்து வருடங்கள் எங்கள் அரசாங்கமாக வலுவாக இருக்க, எங்களுக்கு அனைத்து கட்சிகளினதும் உறுதியான ஒத்துழைப்பு தேவை, அதனால் நாட்டில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து, நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும். அத்தோடு ஒற்றுமை அரசு தொடர்ந்து வலுவாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here