கூச்சிங்கில் மீண்டும் வெள்ளம்….!

நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், கூச்சிங்கின் தாழ்வான பகுதிகளில் இன்று காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், தாமான் டேசா வீரா, பத்து காவாவில் உள்ள டேசா வீரா மற்றும் கம்போங் சின்னார் புடி பாரு மீள்குடியேற்றத் திட்டத்தில் உள்ள சுமார் 30 குடியிருப்பாளர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சமாரியாங், மாடாங், கோத்தா செந்தோசா, ஸ்தாம்பின் மற்றும் பத்து திகா பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அப்பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்க தமது உறுப்பினர்கள் கடமையிலுள்ளனர் என்றும், தேவைப்பட்டால், மக்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றும் பணிகளைச் செய்யத் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here