ஒற்றுமை அரசு செயலக கூட்டத்திற்கு மூடாவுக்கு மீண்டும் அழைப்பு இல்லை

மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டத்திற்கு (மூடா) மீண்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) நடைபெறும் கூட்டத்தில் கட்சியை சேர்க்கக் கோரி பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு மூன்றாவது கடிதம் அனுப்பியுள்ளதாக மூடா பொதுச் செயலாளர் அமீர் அப்துல் ஹாடி தெரிவித்தார்.

இன்னும் (பக்காத்தான்) எந்த பதிலும் இல்லை. எதுவாக இருந்தாலும், மாநில தேர்தல்களுக்கான தயாரிப்புகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம் என்று அமீர்  கூறினார். பிப்., 7ல் நடந்த முதல்  அரசு செயலக கூட்டத்திலும் மூடா அழைக்கப்படவில்லை.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு 81 பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரிசான் நேஷனல் 30, கபுங்கன் ரக்யாட் சபாவின் 6, கபுங்கன் பார்ட்டி சரவாக்கின் 23, வாரிசான் 3, இரண்டு சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்ட்டி கேடிஎம், மூடா மற்றும் பிபிஎம் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசு செயலகக் கூட்டம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, WTCக்கு அடுத்துள்ள ஶ்ரீ பசிபிக் ஹோட்டலில் பக்காத்தான் கூட்டத்திற்கு அன்வார் தலைமை தாங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here