சுகாதாரக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 42 உணவு வளாகங்களை மூட உத்தரவு – சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை

இந்த ஆண்டு கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் எலிகள் தொல்லை மற்றும் சுகாதாரமின்மை காரணமாக சிலாங்கூரில் உள்ள 42 உணவு வளாகங்கள் மூடுமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சிலாங்கூரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 673 உணவு வளாகங்களில் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய Operation Clean Premises (OPB) நடவடிக்கை மூலம், இந்த குற்றத்தை கண்டறிந்ததாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குனர், டத்தோ டாக்டர். ஷாரி ங்காடிமான் கூறினார்.

சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் அல்லது உணவு மாசுபாடு இல்லாத உணவு வளாகத்தை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது என்று கூறினார்.

“ஆய்வு செய்த மொத்த உணவகங்களில் ஆறு விழுக்காடு அல்லது 42 உணவு வளாகங்கள் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டதால் அவற்றை மூட உத்தரவிடப்பட்டது என்று அவர் கூறினார்.

“மேலும், உணவு சுகாதார ஒழுங்குமுறைகள் (PPKM) 2009 இன் 32B கீழ் மொத்தம் 287,200 மதிப்புள்ள 462 அபராதங்கள் வெளியிடப்பட்டன,” என்று அவர் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here