மின் தடை காரணமாக KTM ரயில் சேவை பாதிப்பு

நேற்று புதன்கிழமை (மார்ச் 22) ஏற்பட்ட மின் தடை காரணமாக, கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் KTM ரயில் மற்றும் நகரங்களுக்கு இடையேயான மின்சார ரயில் (ETS) ஆகியவற்றின் சேவைகளில் தடை ஏற்பட்டதாக KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈப்போ, கோலாலம்பூர் மற்றும் பத்துமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மாலை 5.50 மணிக்கு ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாக அது மேலும் கூறியது.

“காண மழை காரணமாக ஸ்லிம் ரிவர் முதல் சுங்கை பூலோ வரையிலான நிலையங்கள், கெப்போங் முதல் ரவாங் வரையான ரயில் நிலையங்கள் மற்றும் ராசா முதல் ஸ்லிம் ரிவர் நிலையங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது” என்று KTMB தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக ரயில் சேவைகளில் 120 நிமிட தாமதம் ஏற்பட்டது என்றும், ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்காக அனைத்து பயனர்களிடமும் KTMB நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here