விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தனித்து வாழும் தாய்க்கு சிறை உள்ளிட்ட அபராதம்

ஜார்ஜ் டவுன்: விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக, தனித்து வாழும் தாய் ஒருவருக்கு, நான்கு மாத சிறைத் தண்டனை RM2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 2.25 மணி வரை குற்றத்தைச் செய்ததாக அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கெடாவின் ஜாலான் போகோக் சேனாவைச் சேர்ந்த நட்ஸிரா அஜிசோ @ அசிஸாம் 43, என்பவருக்கு மாஜிஸ்திரேட் அஸ்லான் பஸ்ரி அபராதம் விதித்தார்.

மற்ற இரண்டு பெண்கள், நூருல் நஜிஹா அபு பக்கர், 23, மற்றும் நோர் ஹஃபிசா ரோஸ்லி 32, குற்றத்தை மறுத்து விசாரணையை கோரினர். அவர்களுக்கு தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM4,000 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வழக்குகளை ஜூன் 28ஆம் தேதி குறிப்பிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here