நேற்று கோத்தா திங்கியின் சேனாய் நோக்கிச் செல்லும் செனாய் தேசாரு நெடுஞ்சாலையின் 58.3 ஆவது கிலோமீட்டரில், இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் ஐவர் காயமடைந்தனர்.
Perodua Alza மற்றும் Hyundai i30 ஆகிய இரு கார்கள் விபத்துக்குள்ளானது குறித்து மாலை 3 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்தது என்று, பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய மூத்த தீயணைப்பு அதிகாரி 1 பைசல் அஹ்மட் கூறினார்.
Perodua Alza காரில் பயணித்த ஆறு பேரில் இரு பெண்கள் இறந்தனர், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் காயமடைந்தனர் மற்றும் ஒரு குழந்தையும் உயிர் பிழைத்தது; Hyundai i30 பயணித்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
“தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, Alzaவில் சிக்கியிருந்த இருவரைக் கண்டோம். அவர்களை காருக்கு வெளியே மீட்க முடிந்தது, ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகத்தின் பணியாளர்கள் உறுதிசெய்தனர், பின்னர் அவர்களின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
“காயமடைந்தவர்கள் MOH ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.