சமீபத்திய வெள்ளத்தில் ஜோகூர் மாநிலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமான பத்து பகாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 419 பேர் அங்குள்ள ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றிரவு 124 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேராக இருந்தது என்று ஜோகூர் மாநில அரசு செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.