அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் நேற்று கடுமையான சூறாவளி புயல் காற்று வீசியது. இதனால், காரணமாக மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும், வீடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
காற்றுடன் மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புயலால் மிசிசிபி மாகாணத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில், புயலால் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த புயலை தொடர்ந்து மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.