கம்போங் இம்பஹான் அருகே திடீரென ஆற்றில் கவிழ்ந்த காரில் சிக்கிய தனது ஐந்து வயது மகனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 40 வயதான லசிபி லவாஹிது, அவரது மகன் முஷாப் உமைர் லசிபி (5) என்பவரை பெராடுவா மைவி காரினுள் விட்டு விட்டு, பாதிக்கப்பட்டவர் கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
குறித்த காரின் இயந்திரம் இயங்கு நிலையில் இருந்ததாகவும், திடீரென கார் நகர்ந்து ஆற்றில் விழுந்தது, உடனே அவர் மகனை மீட்க ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது என்று, பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் முகமட் ஹரிஸ் இப்ராஹிம் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் தனது மகனை வாகனத்திலிருந்து மீட்டதாகவும், அங்கு மீன்பிடிக்கச் சென்ற மற்றுமொருவர் அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
“குறித்த நபர் குழந்தையை கரைக்கு கொண்டுவந்தபோது, பாதிக்கப்பட்டவர் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
மீட்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு (HQE) அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பதில் தலைவர் ரோனி சிகாவன் கூறுகையில், நேற்று மாலை 5.53 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே பாதிக்கப்பட்டவரை தேடும் நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.
“நேற்றிரவு 11 மணி வரை, பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றும், தேடல் பணி இன்று காலை மீண்டும் தொடரும் என்றும் அவர் கூறினார்.