பாடாங் செராயில் கடும் புயல்: 50 ரமலான் பசார் கூடாரங்கள் சேதம்

பாடாங் செராயில் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் வீசிய புயலால், அங்குள்ள ரமலான் பசார் வணிக விற்பனை தளத்தில் உள்ள பெரிய கூடாரங்கள் உட்பட குறைந்தது 50 வணிகக் கூடாரங்கள் சேதமடைந்தன.

இச்சம்பவத்தால் வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த ஆடைகள், உணவுகள் மற்றும் பல பெருநாள் கொண்டாட்ட பொருட்கள் போன்ற பல்வேறு விற்பனைப் பொருட்கள் தரையில் சிதறின.

இந்த சம்பவத்தில் ஏழு ரமலான் பசார் கூடாரங்கள் கடுமையாக சேதமடைந்தன மற்றும் கவிழ்ந்த சில கூடாரங்களால் பல வாகனங்களில் மோதின.

அங்குள்ள ஒரு குடியிருப்பாளரான 36 வயதான இலியா ஃபர்ஹான் முகமட் இலியாஸ் கூறுகையில், சுமார் 15 நிமிடங்களுக்கு பலத்த காற்று வீசியதால் அங்கிருந்த அனைத்து வணிக கூடாரங்களும் காற்றில் அடித்து செல்லப்பட்டன என்றார்.

இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here