மலாக்காவின் முதலமைச்சராக டத்தோஸ்ரீ அப்துல் ரவுவூஃப் யூசோவின் நியமனம் மாற்றத்தை கொண்டு வருவதோடு, மாநிலத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.
அப்துல் ரவூஃப் தனது பணியை சிறப்பாக தொடர்வார் என்றும், இனிவரும் நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் ரிங்கிட் வரை முதலீடுகளை கொண்டு வரக்கூடியவாறு திறன் கொண்ட தொழில்துறைகளை அவர் திறம்பட செயற்படுத்துவார் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்று துணைப்பிரதமரும் அம்னோவின் தலைவருமான அஹ்மட் ஜாஹிட் மேலும் கூறினார்.
மலாக்காவின் 13வது முதலமைச்சராக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரஃவூப் நேற்று பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.