அழகான முகம், உதட்டில் சிரிப்பு, அப்பாவித்தனம் ஆனால் உலகின் மிகப்பெரிய குற்றவாளி சமந்தா லுத்வைட்

அழகான முகம், உதட்டில் சிரிப்பு, போலீசையே முட்டாளாக்கும் அப்பாவித்தனம். இங்கிலாந்தில் பிறந்த பெண் சமந்தா லுத்வைட், 2012 முதல் இன்டர்போலால் தேடப்படும் உலகின் மிகவும் தேடப்படும் குற்றவாளி ஆவார்.  சமந்தா தனது சிரித்த முகத்தின் பின்னால் கொடூரமான எண்ணைங்களை மறைத்துக்கொண்டார். சமந்தா கல்லூரியில் படிக்கும் போது மிகவும் அழகாக இருந்தார். வடக்கு அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்த போது நாடு முழுவதும் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சமந்தா இந்தப் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இந்தப் போராட்டங்களின் போதுதான் ஜெர்மைன் லிண்ட்சே என்ற இளைஞனை சந்தித்தார்.  சமந்தாவும் ஆரம்பத்தில் ஜெர்மைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மீது நிறைய வெறுப்பு இருந்தது. சோமாலியாவைச் சேர்ந்த அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர முடிவு செய்தனர்.

2005 ஆம் ஆண்டு லண்டனில் நிலத்தடி ரெயில் மற்றும் பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலில் பங்கேற்ற பயங்கரவாதிகளில் ஜெர்மைன் லிண்ட்சேயும் ஒருவர், மேலும் இந்த தாக்குதலில் ஜெர்மைனும் கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலில் 26 பிரிட்டிஷ்காரர்கள் உயிரிழந்தனர்.

பர்தா அணிந்த பெண் ஒருவர் தாக்குதல் நடத்திய குழுவிற்கு தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில் ரெயில் தாக்கப்பட்டது. அந்த இளம்பெண் அரபு மொழியில் அறிவுரைகளை பயங்கரவாதிகளுக்கு வழங்கிஉள்ளார். போலீசார் சமந்தாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர், ஆனால் சமந்தா தாக்குதல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். போலீசாரிடமும் கூட உறுதியான ஆதாரம் இல்லை.இதனால் சமந்தா கைது செய்யப்படவில்லை. இதற்கு பிறகு சம்ந்தா ஆப்பிரிக்கா சென்றார். கணவனை இழந்ததால் ‘தி ஒயிட் விதவை’ என, ஊடகங்கள் அவருக்கு பெயர் வைத்தன.

சோமாலியா நாட்டைச் சேர்ந்த, அல்-ஷபாபின் தலைவி சமந்தா லுத்வைட் என, தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு. நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் மால் மீதான தாக்குதலின் பின்னணியில் சோமாலிய பயங்கரவாத அல்-ஷபாப் அமைப்பு உள்ளது. கடைவீதியில் ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்திய வன்முறையில் 200 பேர் காயமடைந்துள்ளதுடன் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமந்தாவுக்கு பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தாலும் அவர் இதுவரை பிடிபடவில்லை. சமந்தா 2014 இல் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன, ஆனால் எந்த அமைப்பும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. சமந்தா இன்னும் சோமாலியாவில் பதுங்கி இருப்பதாகவும், அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு கென்யாவின் மொம்பாசாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் கால்பந்து ரசிகர்கள் குறிவைக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை இந்த சமந்தா செய்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிறகு சமந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here