பேயை திருமணம் செய்த பெண் பாடகி- ஆவி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கிறாராம் …?

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான பெண் பாடகி ராக்கர் ப்ரொகார்டி. இவர் கடந்த ஆண்டு ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த ஆலயத்தில் நடைபெற்றது. அவர் தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆவி கணவர் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டதாகவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆவி கணவர் ‘அழும் குழந்தையின் அலறலை’ பயன்படுத்தி தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறியுள்ள பாடகி, ஆவி கணவருடனான உரையாடலுக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பெரும் சங்கடத்தில் சிக்கி இருப்பதாக கூறிய அவர் தற்போது பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாடியுள்ளார்.

தனது கணவரை சந்திக்கும் முன்பு பேய்கள் போன்றவற்றின் மீது ராக்கருக்கு நம்பிக்கை இருந்ததில்லையாம். கணவர் மீது கொண்ட காதலால் திருமணத்தை தக்க வைக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரின் நடவடிக்கைகள் தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதால் தற்போது விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here