வணிக அட்டையில் அங்கீகரிக்கப்படாத ‘டத்தோ’ பட்டத்தைப் பயன்படுத்தியதாக ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்படாத “டத்தோ ” என்ற பட்டத்துடன் தனது வணிக அட்டையை ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக ஒரு ஒப்பந்ததாரர் ஒருவர் மீது இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) அம்பாங் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான முகமது ரஃபி முகமட் ஹனிஃபா என்பவர், ‘டத்தோ முகமட் ரஃபி முகமது ஹனிஃபா’ என்ற பயரிலுள்ள வணிக அட்டையை அந்தப் பெண்ணிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அவர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

இவ்வழக்கில் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM5,000 ஜாமீன் வழங்கிய மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலினா பசிரா முகமட் டாப், வழக்கை மீண்டும் செவிமடுக்க மே 24 ஆம் தேதியை நிர்ணயித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here