கோத்தா திங்கி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக நடந்த ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், பிச்சைக்காரர்கள் என நம்பப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 மாத பெண் குழந்தையும் அடங்கும் என்பது மிகவும் பரிதாப்பத்திற்குரியது.
மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் சமூக நலத் துறை (JKM) இணைந்து, நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டதாக, கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.
மேலும், அவர்களை பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக நம்பப்படும் இரண்டு உள்ளூர் ஆண்களையும் போலீசார் கைது செய்யதனர்.
“குடியேற்ற சட்டத்தின் கீழ், மேல் நடவடிக்கைக்காக நான்கு வெளிநாட்டவர்கள் (மியன்மார் நாட்டவர்கள்) குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஏனையோர் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார்.