வெளியுறவு அமைச்சர் நியூசிலாந்திற்கு பணிப் பயணம்

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர், மே 2 முதல் 4 வரை நியூசிலாந்திற்கு தனது முதல் பணி பயணத்தை நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நானாயா மஹுதாவின் அழைப்பின் பேரில் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 2022 இல் ஜாம்ப்ரி வெளியுறவு அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு அவர் செல்லும் முதல் பசிபிக் நாடு நியூசிலாந்து ஆகும்.

இந்த பயணத்தின் போது, அவர் நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் மஹுதாவை சந்திக்க உள்ளார், அத்தோடு இரு நாட்டு அமைச்சர்களும் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here