போர்டிக்சனில் சட்டவிரோத முறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்

போர்ட்டிக்சனிலுள்ள ஒரு வளாகத்தில், நேற்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் நெகிரி செம்பிலான் மாநில அமலாக்கப் பிரிவு, காவல்துறையினரின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட Op Tiris நடவடிக்கை மூலம், சட்டவிரோத முறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந் 7,200 லிட்டர் மானிய விலையிலான டீசலை பறிமுதல் செய்தது.

நேற்று இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், டீசல் தவிர அங்கிருந்த இரண்டு லோரிகள், ஒரு டேங்கர், ஒரு கைத்தொலைபேசி மற்றும் எரிபொருளை தவறாக பயன்படுத்த பயன்படுத்திய உபகரணங்களை என்பவற்றையும் தாம் கைப்பற்றியதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு RM195,480 என்றும், அதன் இயக்குனர் முஹமட் ஜாஹிர் மஸ்லான் கூறினார்.

“இந்த வளாகத்தில் நடந்த சோதனையின் போது, இரண்டு பேர் மானிய விலையில் வழங்கப்பட்ட டீசலை டேங்கரில் இருந்து லோரிகளுக்கு (டேங்குகள்) மாற்றுவதைக் கண்டதாகவும்,” விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இருவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here