தானா மேரா அம்னோ பிரிவுத் தலைவராக வான் ராகேமி வெற்றி

இன்று சனிக்கிழமை (மே 6) நடைபெற்ற தேர்தலில் தானா மேரா அம்னோ பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு டத்தோ வான் ராகேமி வான் ஜஹாரி வெற்றி பெற்றார்.

இது தொடர்பில் கிளாந்தான் அம்னோ இணைப்புக் குழுச் செயலாளர் டத்தோ அக்பர் சலீம் கூறுகையில், வான் ராகேமி 196 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் என்றும், டத்தோ இர் ஷாரி ஹாசன் மற்றும் குவால் ஈப்போ சட்டமன்ற உறுப்பினர் முகமட் பக்ரி முஸ்தபா ஆகியோர் முறையே 158 வாக்குகளும் 114 வாக்குகளும் பெற்றனர்.

“இன்றைய தேர்தல் சுமூகமாக நடந்ததையிட்டு நான் சந்தோசப்படுகிறேன் என்றும், வாக்களிக்கச் சென்ற பிரதிநிதிகளில் மொத்தம் 515 பிரதிநிதிகளில் 474 பேரும் கலந்து கொண்டனர்,” என்றார்.

ஜூன் 16, 2020 முதல் இடைநிறுத்தப்பட்ட தானா மேரா அம்னோ பிரிவுத் தலைவர் தேர்தல் சிறந்த முடிவுகளுடன் மீட்டெடுக்கப்பட்டது என்று அக்பர் கூறினார்.

இதற்குப் பிறகு, இந்தப் பிரிவை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி மாநிலங்களவைத் தேர்தலுக்குத் தயாராவோம்.

இப்பிரிவு முன்பு டத்தோஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஜிஸ் தலைமையில் இருந்தது.இருப்பினும், இக்மல் ஹிஷாம் 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி பெர்சாத்துவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here