ஜூரு சுங்கச்சாவடியின் வெளியேறும் பாதையில் வடக்கு/சுங்கை துவா நோக்கிச் செல்லும் மோட்டார் சைக்கிள் பாதை எதிர்வரும் மே 10 முதல் 26 வரை மூடப்படும்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் ஜூரு டோல் பிளாசாவில் மோட்டார் சைக்கிள் பாதை, நடைபாதை மறுசீரமைப்பு மற்றும் நெடுஞ்சாலையுடன் தொடர்பான வேலைகளை கட்டம் கட்டமாக மேற்கொள்வதற்கு இந்த மூடல் தேவை என்று, PLUS Malaysia நிறுவனம் இன்று (மே 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.











