மியன்மார் – சென்னை இடையே நேரடி விமா­னச் சேவை ஆரம்பம்

மியன்மார் – சென்னை இடையே நேரடி விமா­னச் சேவை தொடங்கி உள்­ளது. இதற்குப் பல்வேறு தரப்­பி­ன­ரும் வர­வேற்பு தெரி­வித்­துள்­ள­னர்.

மியன்மாரில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த கணி­ச­மான எண்ணிக்கை­யி­லா­ன­வர்­கள் வசித்து வரு­கின்­ற­னர். எனி­னும் அந்­நாட்­டுக்கு தமி­ழ­கத்­தில் இருந்து நேரடி விமானச் சேவை இல்லை என்ற குறை­பாடு நீடித்து வந்­தது.

இந்­நி­லை­யில், மியன்மார் ஏர்வேஸ் விமான நிறு­வ­னம் இதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது. அந்­நாட்­டின் யங்­கூன் நகருக்­கும் சென்­னைக்­கும் இடையே புதிய விமானச் சேவையைத் தொடங்கி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் யங்­கூன் நக­ரில் இருந்து சென்­னைக்கு இயக்­கப்­பட்ட விமானம் மூலம் 48 பய­ணி­கள் சென்னை வந்­த­டைந்­த­னர். சென்னை அனைத்துலக விமான நிலை­யத்­துக்கு வந்து சேர்ந்த அந்த விமா­னத்­துக்கு இருபுற­மும் தண்­ணீர் பாய்ச்சி வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. 48 பயணி­க­ளை­யும் விமான நிலைய அதி­கா­ரி­கள் வர­வேற்­ற­னர்.

பின்­னர், அதே விமா­னம் சென்­னை­யில் இருந்து 78 பயணி­க­ளு­டன் யங்­கூ­னுக்கு புறப்பட்­டுச் சென்­றது.

இனி வாரந்தோ­றும் சனிக்­கிழமை­யன்று யங்­கூன், சென்னை இடையே நேரடி விமா­னம் இயக்­கப்­படும் என்­றும் யங்­கூ­னில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமா­னம் பகல் 10.15 மணிக்கு சென்னை வந்­த­டை­யும் என்­றும் அதிகா­ரி­கள் தெரி­வித்தனர்.

அதே விமா­னம் சென்­னை­யில் இருந்து மீண்­டும் 11.15 மணிக்குப் புறப்­பட்டு யங்கூ­னுக்கு செல்­லும் என்­றும் பய­ணி­க­ளின் வர­வேற்பை பொறுத்து, இந்த விமானச் சேவை அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here