கங்கார் புலையைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வாலிபர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
14 முதல் 21 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் திருடியதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், மே 1 அன்று இரவு 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரஹ்மட் அரிஃபின் கூறினார்.
அவர்களிடமிருந்து மூன்று EX5 ரக மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்றும், நோன்புப்பெருநாள் கொண்டாட்ட காலத்தின் போது தனிப்பட்ட பாவனைக்காக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
முன்னர் எந்த குற்றப்பதிவுகளையும் கொண்டிராத மூன்று சந்தேக நபர்களும், கடந்த மாதம் முதல் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.