வியட்நாமில் வரலாறு காணாத அளவில் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
சனிக்கிழமையன்று (6 மே) அந்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 44.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இதற்கு முன்பு வியட்நாமில் வெப்பநிலை 43.4 டிகிரி செல்சியசைத் தாண்டியதில்லை.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பல தெற்காசிய நாடுகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் என்றும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.