தென்மேற்கு பருவமழை மே 15 முதல் தொடங்கும் – மலேசிய வானிலை ஆய்வு மையம்

வரும் மே 15ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை சீரான வலுவான காற்றைக் கொண்டுவரும் என்பதால், அகாற்றுக்கள் குறைந்த ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும் என்றும், இந்தக் காற்று குறைவான மழை மேகங்களை உருவாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

“இக்காலங்களில் நாட்டின் பல பகுதிகள் மழை நாட்களை விட வறண்ட நாட்களையே பெரிதும் அனுபவிக்கும், அதாவது குறைவான மழை பெய்யும்” என்று அது இன்று செவ்வாய்க்கிழமை (மே 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு சபாவில், குறிப்பாக அதிகாலையில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ளப்படும் திறந்த எரிப்பு காரணமாக மூடுபனி அல்லது புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் அது கூறியுள்ளது.

“மூடுபனி மற்றும் மாசுபாட்டின் விளைவுகளை குறைக்க இதுபோன்ற திறந்தவெளி எரிப்புக்களை தவிர்க்க வேண்டும், இந்த காலகட்டத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here