லோரி ஓட்டுநரை தலைக் கவசத்தால் தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

இஸ்கந்தர் புத்திரியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் லோரி ஓட்டுநரை தலைக் கவசத்தால் தாக்கும் வீடியோ வைரலானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை (மே 10) காலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரஹ்மட் அரிஃபின் தெரிவித்தார்.

வீடியோவில் உள்ள சம்பவம் சிங்கப்பூர் நோக்கி செல்லும் தஞ்சோங் குபாங் சுங்கச்சாவடியில் நடந்ததாக நம்பப்படுகிறது. லோரிப் பாதையை பயன்படுத்தியதற்காக சந்தேக நபரை லோரி ஓட்டுநர் திட்டியதால்” இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

“பின்னர் சந்தேக நபர் குறித்த லோரி ஓட்டுநரை தாக்கினார், பின்னர் அவரது மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண்ணால் இழுக்கப்பட்ட பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்,” என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 427 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணையில் உதவுமாறு இஸ்கந்தர் புத்திரி காவல்துறையை அணுகுமாறு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here