பினாங்கில் நீர் விநியோகத்தடை – 600,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பினாங்கில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத்தடையால் சுமார் 600,000 நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, பினாங்கு நீர் வழங்கல் கழகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது, மாநிலம் மற்றும் அண்டை மாநிலமான கெடாவிற்கான முக்கிய நீர் ஆதாரமான சுங்கை மூடாவில் ஏற்பட்டுள்ள திடீர் நீர் வற்று ஏற்பட்டதன் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, புக்கிட் ஜம்புல் மற்றும் சுங்கை ஆராவில் உள்ள குடும்பங்கள், பாலிக் பூலாவ் வரையிலான பாயான் லெப்பாஸின் சில பகுதிகள் மற்றும் பிறையை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தடை அல்லது குறைந்த நீர் அழுத்தம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பினாங்கு மாநில நலன் நிர்வாகக் குழு உறுப்பினர் பீ பூன் போஹ் கூறுகையில், மாநிலத்தின் இரண்டு நகர சபைகள் தண்ணீர் டேங்கர்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றிய புகைப்படங்களையும் விவரங்களையும் பகிர்ந்துள்ளார், அதே நேரத்தில் PBAPP பொறியாளர்கள் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here