கிள்ளான் பாதுகாக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட 11 பேர் கைது

ஷா ஆலம்: கிள்ளான் நதி காப்பு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 11 பேர் கொண்ட குழு இன்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம், இங்குள்ள 36ஆவது பிரிவில் உள்ள சுங்கை கிள்ளான் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

எட்டு உள்ளூர் குடிமக்களைத் தவிர, மேலும் இருவர் இந்தோனேசிய குடிமக்கள் மற்றும் மீதமுள்ள ஒருவர் இந்திய நாட்டு பிரஜை என்று அவர் கூறினார்.

இந்தச் சோதனையில், நான்கு லோரிகள் (ரோரோ) மற்றும் மூன்று பிக்-அப் டிரக்குகளையும் பறிமுதல் செய்தோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து காப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு தொடங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டது.

குப்பை மற்றும் திடக்கழிவுகளை கொட்டுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல், ஆற்று மணல் மற்றும் நிலத்தை அகழ்வு செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்களில் அடங்கும்  என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 447ஆவது பிரிவின்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணை ஆவணம் சிலாங்கூர் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டதாகவும் முகமட் இக்பால் கூறினார். டிபிஆர் அனைத்து 11 சந்தேக நபர்களையும் அத்துமீறி நுழைந்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 இன் கீழ் குற்றம் சாட்ட உத்தரவிட்டது.

கூடுதலாக, அவர்களில் ஒருவர் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c) இன் படி, அதிக காலம் தங்கியதற்காக குற்றம் சாட்டப்படுவார். மற்ற இருவரும் அதே பிரிவு 6(1)(c) இன் படி சரியான அடையாள ஆவணம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here