டுவிட்டருக்கு போட்டியாக புதிய வலைதளம் – மேத்தாவின் புதிய திட்டம்!

சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது. இந்த சமூக வலைதளம், “Instagram for your thoughts” எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மேத்தா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும். புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மேத்தாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here