ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு புத்திசாலித்தனமான கூட்டணியின் கீழ் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்வதுடன், நேர்மறையான எண்ணங்களைக் உருவாக்குவதும் மிக முக்கியம் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணி கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம், அத்தொசு புதிய அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று துணைப் பிரதமர் மேலும் கூறினார்.
எனவே அனைத்து உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் ஆதரவின் மூலம் ஒற்றுமை அரசாங்கத்தின் பலத்தை அதிகரிக்க வேண்டும், அத்தோடு உறுப்புக் கட்சிகள் தங்களுக்கிடையிலான ஏமாற்றங்கள் மற்றும் விரக்தியை மறந்து, அனைவரும் தேசிய முன்னணியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.