லங்காவி அனைத்துலக கடல், ஆகாயத் துறை கண்காட்சி 2023 (LIMA ’23) இன்று தொடங்கப்பட்டது.
மஹ்சூரி அனைத்துலக கண்காட்சி மையத்தில் (MIEC) 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியன.
இதில் தென் கொரியாவின் பிளாக் ஈகிள் , இந்தோனேசியாவின் ஜூபிட்டர், ரஷ்யாவின் ரஷ்ய நைட் மற்றும் சீனாவின் ஆகஸ்ட் 1 ஆகியவற்றை உள்ளிட்ட அனைத்துலக விமானப்படைக் குழுக்களும் பங்கேற்பதை மலேசிய ஆயுதப்படை உறுதி செய்துள்ளது.
இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கெடா முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் சானுசி முகமட்நோர் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மற்றும் பல உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காலை 9.45 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், போர் விமானங்களின் தாழ்வான பறக்கும் நடவடிக்கைக்கு கூடுதலாக அழகு சேர்க்கும் வகையில், வெடிகுண்டு வெடிப்புகள், தீப்பிழம்புகள் மற்றும் புகை மூட்டங்கள் ஆகியவை பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்தளித்தன.
இந்நிகழ்வில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். LIMA’23 கண்காட்சி வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.