மீண்டும் ஒரு ஊரடங்கு…? கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு… WHO எச்சரிக்கை…!

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக சூழலியலாளர்கள், ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக நாடுகளை அடியோடு அசைத்துப் பார்த்த கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் பரவியது என்ற தகவலும், அதனை ஆய்வுகள் மூலம் சீனா மறுத்ததும் நாம் அறிந்த செய்தி.

70 லட்சம் உயிர் பலிகள், பொருளாதார இடர்பாடுகள், வேலை இழப்புகள் என மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய கோவிட் 19 பெருந்தொற்றைப் போல மீண்டும் ஒரு பெருந்தொற்று அதே சீனாவில் இருந்து பரவும் அபாயம் இருப்பதாக எழுந்திருக்கும் எச்சரிக்கைதான் நம்மை சற்று பீதிக்கு உள்ளாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here