உண்மையை உரத்துக் கூற மலேசியாவுக்கு சுதந்திரமான, துணிச்சலான ஊடகங்கள் தேவை – ஃபாஹ்மி

மலேசியாவிற்கு சுதந்திரமான ஊடகம் மட்டும் தேவை இல்லை, எந்தவித பயமும், தயவும் இல்லாமல் உண்மையை உரத்துப்பேசும் அளவுக்கு துணிச்சலான ஊடகமும் தேவை என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

“உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2023 இன் அடிப்படையில் மலேசியா 73வது இடத்தைப் பிடித்துள்ளது, இது பல வருடங்களில் மலேசியா அடைந்த மிக உயர்ந்த சாதனையாகும். ஆனால் இந்த நிலைப்பாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; நாம் செய்ய நிறைய வேலை இருக்கிறது.

‘ஊடகத்தின் எதிர்காலம்’ என்ற கருப்பொருளில், மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) மற்றும் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் துன் அப்துல் ரசாக் (IPPTAR) இணைந்து தேசிய பத்திரிகையாளர்கள் தினம் (ஹவானா) 2023 உடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here