ஜோகூர் மாநிலத்தில் நான்கு பாழடைந்த குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை சரிசெய்து, பராமரிக்க ஜோகூர் அரசாங்கம் RM42.1 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
ஜோகூரில் உள்ள பெரும்பாலான குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு குப்பைகளால் நிரம்பியதாகவும், அவை விஷ பூச்சிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுவதாகவும் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் கண்டனைத்தை தொடர்ந்து, இந்த சீரமைப்பு பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று, ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சிக் குழுவின் தலைவர், டத்தோ முகமட் ஜஃப்னி எம்.டி ஷுகோர் கூறினார்.
தற்போது RM42.1 மில்லியன் ஒதுக்கீட்டில் குறைந்த விலையில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அப்பணிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.