திருடப்பட்ட பொருட்களை இடம்மாற்ற உதவியதாக லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

கடந்த மாதம் RM60,000 மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை இடம்மாற்ற உதவியதாக ஒரு லோரி ஓட்டுநர் மீது இன்று, ஜெமாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

பி. கங்கு நாயுடு, 51, என்ற குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால், மாஜிஸ்திரேட் கார்த்தினி கஸ்ரான் முன்நிலையில் தமிழில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மே 12 அன்று அதிகாலை 5.35 மணியளவில் ஜெமாஸில் உள்ள ஒரு வணிக மையத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திருடப்பட்ட சொத்து என்று தெரிந்தும் வேண்டுமென்றே, அதாவது டஜன் கணக்கான குளிரூட்டிகளை (ஏர் கண்டிஷனிங் யூனிட்கள்) இடம்மாற்ற உதவினார்.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் 414வது பிரிவின் கீழ் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் RM6,000 பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது, மேலும் வழக்கு மீண்டும் ஜூலை 6 ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here