கம்பார், கோபேங்கில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள ஏரியில் நீந்தியபோது குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
26 வயதான செரோஜ் செனோலியின் உடல், இன்று காலை 9.45 மணியளவில், பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் நீர் முக்குளிப்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பரின் சாட்சியத்தின் அடிப்படையில், குறித்த நேபாளி மற்ற இரண்டு நண்பர்களுடன் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது, பின்னர் அவர் அந்த ஏரியில் நீந்தத் குதித்தார் என்றும், பாதிக்கப்பட்டவர் மூழ்குவதற்கு முன்பு கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் உள்ள சுரங்க ஏரியின் நடுப்பகுதிக்கு நீந்தினார் என்றும் அப்போது நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7.37 மணிக்கு வந்த அழைப்பை அடுத்து, தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவரைத் தேடத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து,தீயணைப்பு துரையின் டைவிங் குழுவினரின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் சடலம் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.