இந்திய ரெயில் விபத்து; ஓட்டுநர்களின் நிலை என்ன?

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. 288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், ரெயில் விபத்துக்கு காரணம் நாசவேலைதானா என்பது தெரிய வரும்.

விபத்தில் படுகாயமடைந்த லோகா பைலட்டிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அங்கிருந்து தகவல் கூறுகின்றன.

லோகோ பைலட், துணை லோகோ பைலட் இருவரிடமும் விபத்து குறித்து மருத்துவமனையில் வைத்தே விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் கூறும் தகவல்கள் கோரமண்டல் விபத்து வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here