விரைவுப் பேருந்தில் பெண் ஒருவரை ஆபாசமாக தொட்ட ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

விரைவுப் பேருந்தில் பயணித்தபோது, ஆடவர் ஒருவர் தன்னை ஆபாசமாக தொட்டதாக 22 வயது பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 3.11 மணிக்கு அந்தப் பெண் புகார் அளித்ததாக கெரிக் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், சுல்கிஃப்லி மஹ்மூட் கூறினார்.

ஸ்ரீ இஸ்கந்தரில் இருந்து கிளாந்தானில் உள்ள தானா மேராவுக்கு குறித்த பேருந்து சென்று கொண்டிருந்தவேளை ,“பாதிக்கப்பட்டவர் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

பேருந்தில் தனது இருக்கையின் பின்பகுதியில் அமர்ந்திருந்த 20 வயதுடைய ஆண் ஒருவர் தன்னைத் தொட்டதாக, அதாவது சிறிது நேரம் கழித்து தான் அப்பெண் தான் தொடப்பட்டதை உணர்ந்தார்” என்று குறித்த பெண் கூறியதாக அவர் கூறினார்.

“கெரிக் அருகே உள்ள தித்திவாங்சா ஓய்வு பகுதிக்கு அருகே பேருந்து வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கெரிக் போலீஸ் தலைமையகத்தை 05-791 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் சுல்கிஃப்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here