இணைய மோசடி மலேசியாவிற்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் இயக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
ஜூன் 5, 2023 தொடங்கி நான்கு நாட்கள் நடந்த ஆசியா டெக் x சிங்கப்பூர் (ATxSG) நிகழ்வில் கலந்துகொண்டபோது தியோ கூறினார்.
14 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இரண்டு மணி நேர அமைச்சர்கள் வட்டமேசை நாட்டில் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ தலைமை வகித்தார்.
“ஒரு அரசாங்கம் அல்லது நாடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம், ஆனால் OTT உடன் ஈடுபடும் முயற்சியில் அண்டை நாடுகளை ASEAN இல் இணைத்தால், இணைய மோசடி சம்மந்தமான தடுப்பு நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
தியோவின் இந்தக் கருத்துக்களுக்கு பல நாட்டு அமைச்சர்கள் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தினர்.
“எனவே குறைந்தபட்சம் ஆசியான் மட்டத்திலாவது, இந்த சமூக ஊடக தள வழங்குநர்கள் அனைவரும் பயனர்களுக்கு பாதுகாப்பான தளத்தை வழங்குவதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இருத்தல் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த விஜயத்தின் போது, ஜப்பானின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான துணை அமைச்சர் டாக்டர் குனிமிட்சு அயனோவுடன் இருதரப்பு சந்திப்பையும் தியோ நடத்தினார்.
அக்கூட்டத்தில், ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 5G தனியார் நெட்வொர்க் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக தியோ கூறினார்.